Connect with us
   

General

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய சாட்டை துரைமுருகன்…. அப்படி என்ன தான் பிரச்சனை…???

சீமான் தலைமை வகிக்கும் நாம் தமிழர் கட்சியில் இருந்து அடுத்தடுத்து முக்கிய மாவட்ட நிர்வாகிகள் விலகி வந்த நிலையில், தற்போது சாட்டை துரைமுருகன் விலகுவதாக அறிவித்து இருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

#image_title

இதுகுறித்து துரைமுருகன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, “நான் கடந்த 14 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சியில் பயணித்து வருகிறேன். என்னால் இயன்ற கட்சிப்பணியை செய்த போதிலும் நான் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் புறக்கணிக்கப்படுகிறேன். அது எனக்கு பெரிய மன உளைச்சலை தந்துள்ளது .

நான் வேட்பாளராக நிற்க ஆசைப்பட்டு கேட்டபோது பெண் வேட்பாளரை வேறு சமூகத்தில் நிறுத்தி என்னை புறந்தள்ளி விட்டார்கள். எல்லாவற்றையும் தாங்கிக்கொண்ட நான் ஒரு முறை அண்ணன் சீமானை பார்க்க அவர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அன்று அவரை என்னால் பார்க்கவே முடியவில்லை.

இப்போது கூட நான் இரவு 12 மணிக்கு மூன்று முறை அழைத்தும் தலைமையில் யாரும் என் அழைப்பை எடுக்கவில்லை. இப்படிப்பட்ட இடத்தில் நான் இருக்க விரும்பவில்லை ஆகவே நான் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிகுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading

More in General

To Top