
General
பிளாக் பாரஸ்ட் கேக் சாப்பிட்டால் கேன்சர் வருமாம்…. ஓர் ஷாக்கிங் ரிப்போர்ட்…!!!
இன்றைய காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிளாக் பாரஸ்ட் மற்றும் ரெட் வெல்வெட் போன்ற கேக்குகளை தான் விரும்பி சாப்பிடுகிறார்கள். இப்படி உள்ள சூழலில் இதுபோன்ற கேக்குகளை உண்பதால் கேன்சர் தாக்கும் அபாயம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி கர்நாடக உணவு பாதுகாப்பு துறை மாநிலம் முழுவதும் 235 கேக் மாதிரிகளை ஆய்வு செய்தது. அதில் 12 மாதிரிகளில் புற்றுநோயை உண்டாக்கும் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதன்படி இந்த கேக் மாதிரிகளில் அலுரா ரெட், சன்செட் மஞ்சள், ஸ்ட்ராபெரி சிவப்பு, எலுமிச்சை மஞ்சள் மற்றும் மரூன் போன்ற செயற்கை நிறங்கள் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் பயன்படுத்தப்பட்டுள்ளதாம். இது கேன்சர் அபாயத்தை அதிகரிப்பதோடு இல்லாமல், மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிலும் குறிப்பாக இவை ரெட் வெல்வெட் மற்றும் பிளாக் பாரஸ்ட் போன்ற கேக்குகளில் தான் அதிகளவில் இருப்பதாக கூறியுள்ளனர்.