
Television
பாக்கியாவை கைது செய்த போலீஸ்… பதறிய எழில்… மகிழ்ச்சியில் கோபி…!!!
பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா பெரிய பண பிரச்சனையில் சிக்கியுள்ளார். அதில் இருந்து மீள்வதற்காக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார். இதற்கிடையில் செஃப் சதீஷிடம் போனில் பேசும் கோபி அங்கு என்ன நடக்கிறது என்பதை கேட்டு சந்தோசப்படுகிறார்.

#image_title
அப்போது சாப்பிடும் போது யார்கிட்ட பேசுறீங்க என்று ராதிகா கேட்க முக்கியமான போன் என்று கூறி பாக்கியா பண விஷயத்தில் வசமாக சிக்கப்போவதை சந்தோசமாக கோபி கூறுகிறார். அதை கேட்டு ஷாக்கான ராதிகா இதுல என்ன உங்களுக்கு சந்தோசம் என்று கேட்கிறார்.

#image_title
அதற்கு கோபி எனக்கு இதுல தான் சந்தோசம் என்று கூறுகிறார். கூடவே ராதிகாவின் அம்மாவும் ஆமாம் இது சந்தோசமான விஷயம் தான. எப்ப பார்த்தாலும் பாக்கியா பாக்கியானு தூக்கி வச்சிக்கிட்டு ஆடுனாங்கள. இப்போ அனுபவிக்கட்டும் என்று வன்மத்தை கொட்டுகிறார். ஆனால் ராதிகா பாக்கியாவை நினைத்து வருந்துகிறார்.

#image_title
அடுத்ததாக பாக்கியா ரெஸ்டாரெண்ட் முன்பாக பணத்தை கேட்டு அனைவரும் பிரச்சனை செய்கிறார்கள். பாக்கியா அவர்களை சமாதானம் செய்ய முயற்சி செய்கிறார். அப்போது அங்கு வரும் போலீஸ் உங்கள் மீது நிறைய புகார் வருகிறது. அதனால் உங்களை கைது செய்கிறோம் என்று கூறி ஜீப்பில் ஏற்றுகிறார்கள்.

#image_title
அதை பார்த்து எழில் பதறியடித்து எழுகிறார். அப்போது தான் அவருக்கு புரிகிறது இதெல்லாம் கனவு என்று. அடுத்த நாள் பணம் தேவை என்பதால் பாக்கியா வீட்டில் உள்ள நகைகளை எல்லாம் எடுக்கிறார். பின் அவர் ரெஸ்டாரெண்ட்டில் வேலை செய்யும் ஆட்கள் நம்ம ஹோட்டல் மீண்டும் திறக்கப்படுமா என்று கேட்க பாக்கியா நிச்சயம் திறப்போம் என்று நம்பிக்கையோடு பேசி அனுப்புகிறார்.