Connect with us
   

Television

ராமமூர்த்தியின் திருவுருவ படத்தை திறந்து வைத்த ஈஸ்வரி…. கோபி செய்த சம்பவத்தால் ஷாக்காகும் குடும்பத்தினர்….!?!!!

பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் ராமமூர்த்தியின் மரணத்தை தொடர்ந்து ஒரே சோகமான காட்சிகள் தான் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அவரின் மரணம் தொடர்பான காட்சிகளே கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு ஓடியது. அதன் பின்னர் அவர் எழுதிய கடிதங்கள் மற்றும் உயில் ஆகியவற்றை குடும்பத்தினர் படித்து பார்த்தனர்.

#image_title

தங்களின் குடும்பத்திற்கு தூணாக இருந்த ராமமூர்த்தியின் பிரிவை ஏற்க முடியாமல் தவிக்கும் பாக்கியா மற்றும் அவரின் குடும்பத்தினர் ராமமூர்த்தி நினைவிலேயே வருந்தி வருகிறார்கள். இந்த சமயத்தில் பாக்கியா அவரின் ரெஸ்டாரெண்ட்டில் தனது மாமனார் ராமமூர்த்தியின் திருவுருவ புகைப்படத்தை திறந்து வைக்கிறார்.

#image_title

அதன் பின்னர் இன்று தான் இந்த நிலைமைக்கு வர காரணமே ராமமூர்த்தி தான் என்றும் அவரால் தான் தனக்கு தைரியமும் நம்பிக்கையும் ஏற்பட்டது எனவும் பேசுகிறார். அந்த சமயத்தில் யாரும் எதிர்பாராத விதமாக அழையா விருந்தாளியாக கோபி அங்கு வருகிறார். அவரை கண்டதும் அனைவரும் ஷாக்காகிறார்கள்.

#image_title

தன் தந்தையின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்திய கோபி அவர் தனக்கு என்றைக்குமே ஒரு நல்ல அப்பாவாக இருந்ததில்லை. ஆனால் நான் என் பிள்ளைகளுக்கு நல்ல அப்பாவாக இருக்கிறேன் என பேசுகிறார். அதை கேட்டு அனைவரும் உச்சக்கட்ட கோபமாகிறார்கள். அதிலும் பாக்கியா கோபி மீது கொலவெறியில் இருக்கிறார்.

Continue Reading

More in Television

To Top