
Television
எதிர்நீச்சல் 2 சீரியலில் நான் நடிக்கவில்லை… பிரபல நடிகையின் பதிவால் ஷாக்கான ரசிகர்கள்….!!!
சன் டிவியில் இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வந்த சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. பெண்களை அடிமையாக நடத்தும் ஆணாதிக்கம் நிறைந்த ஒரு வீட்டிற்கு மருமகளாக வரும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மிகவும் எதார்த்தமாக காட்சிப்படுத்தி இருப்பார்கள். இந்த தொடரில் பிரபல நடிகை மதுமிதா முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது எதிர்நீச்சல் சீரியல் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. முதல் பாகத்தை தொடர்ந்து இதிலும் மதுமிதாவே நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மதுமிதா அவரது சோசியல் மீடியா பக்கத்தில், “சில காரணங்களுக்காக நான் எதிர்நீச்சல்-2 தொடரில் தொடரப்போவதில்லை. எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. எதிர்காலத்தில் புதிய தொடரில் மீண்டும் வந்தால் இதே அன்பையும், ஆதரவையும் தருவீர்கள் என்று நம்புகிறேன்” என பதிவு செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.