General
சிறுமிகள் தான் டார்கெட்…. பாலியல் வழக்கில் கைதான நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி….!!!
கிருஷ்ணகிரி அருகே 8 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி மற்றும் என்சிசி பயிற்சியாளர் சிவராமன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். என்சிசி பயிற்சிக்காக சென்ற 8ஆம் வகுப்பு மாணவியை சிவராமன் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து பள்ளி தாளாளரிடம் மாணவி புகாரளித்த போது அவர் இதை பெரிதுப்படுத்த வேண்டாமென கூறியதாக தெரிகிறது. பின் மாணவியின் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் இந்த விவகாரம் வெளியே தெரிந்துள்ளது. இந்த மாணவி மட்டுமின்றி மொத்தமாக 13 மாணவிகளிடம் சிவராமன் தவறாக நடந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து சிவராமன் மற்றும் இதில் தொடர்புடைய மேலும் சிலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.