
General
பாவம் விஜய் சின்ன பையன்… அவரை வளர விடுங்க… முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ….!!!!
மதுரையில் சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் நடைபெற்ற மனிதச்சங்கிலி போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்றிருந்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் நடிகர் விஜய் குறித்து சில விஷயங்களை கூறியுள்ளார்.

#image_title
அதன்படி அவர் கூறியதாவது, “விஜய் இப்போது தான் மாநாடே நடத்த போகிறார். திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் எம்.ஜி.ஆருக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய எழுச்சி இருந்தது. அதுபோன்ற ஒரு எழுச்சி தம்பி விஜய்க்கு இருக்குமா என்பது தெரியவில்லை. ஆனால் விஜய் நிறைய இளைஞர்களை கைவசம் வைத்துள்ளார்.
இருப்பினும் மாநாட்டில் கொள்கை அறிவித்த பின்னரே விஜய்யை மக்கள் ஏற்பார்களா? இல்லையா? என்பது தெரியவரும். விஜய்யை பார்த்து அதிமுகவிற்கு பயம் இல்லை. விஜய் கட்சியில் முழுக்க முழுக்க திமுக உறுப்பினர்கள் தான் இருக்கிறார்கள். அதனால் தான் திமுக விஜய்யை விமர்சிக்கிறது.

#image_title
நேற்று வரை நடிகைகளுடன் ஆடிக்கொண்டிருந்த உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்கிய நீங்கள் விஜய் வருவதை ஏன் தடுக்கிறீர்கள்? பாவம் சின்னப் பையன் விஜய். அவரும் வளர வேண்டாமா?” என கூறியுள்ளார்.