Television
ஈஸ்வரியால் வெடித்த சண்டை…. எழிலை பிரிய முடிவெடுத்த அமிர்தா…!!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் குழந்தையை வைத்து ஈஸ்வரி புதிதாக பிரச்சனை செய்கிறார். தான் ஒரு நல்ல நிலைக்கு சென்ற பின்னர் தான் குழந்தை பெற்றுக் கொள்வேன் என எழில் கூற இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

#image_title
இதனால் கோபமடைந்த பாக்கியா எழிலை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். இதனால் அம்மா பேச்சை தட்டாத எழில் மனைவி அமிர்தா மற்றும் நிலா ஆகியோரை அழைத்து கொண்டு வெளியே சென்று ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்குகிறார். இந்த பிரச்சனை அனைத்தையும் இனியா மூலம் கோபி தெரிந்து கொள்கிறார்.
அதேசமயத்தில் தனக்கு எல்லா நேரத்திலும் தனக்கு பக்கபலமாக உறுதுணையாக இருந்த எழிலை நானே வீட்டை விட்டு வெளியே போக சொல்லி விட்டேனே என்று கூறி அழுது புலம்புகிறார். அப்போது அங்கு வரும் செல்வி இப்போ கூட நீ ஒரு போன் போட்டு எழில் தம்பிய வர சொன்னா தம்பி வீட்டுக்கு வந்துரும் என கூற செழியன் போனை எடுக்கிறார்.

#image_title
ஆனால் பாக்கியாவோ அதை தட்டி விட்டு வேண்டாம். எழில் ஒரு பெரிய இயக்குனராகிட்டு மரியாதையோட இந்த வீட்டுக்கு வருவான் என்று கூறுகிறார். இதற்கிடையில் எழில் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு செல்லும் கோபி பாக்கியா குறித்து தவறாக பேசி எழில் மனதை மாற்ற முயற்சி செய்கிறார்.

#image_title
இது ஒருபுறம் இருக்க மறுபுறம் அமிர்தாவோ நான் உங்க வாழ்க்கையில வந்ததால தான் உங்களுக்கு இவ்வளவு பிரச்சனையும். அதனால நானும் நிலாவும் எங்க அம்மா வீட்டுக்கே போயிடறோம் என கூறுகிறார். அதை கேட்டு ஷாக்காகும் எழில் அமிர்தாவை திட்டுகிறார். அதோடு இன்றைய எபிசோட் முடிகிறது.