Television
தனியாக வீடு பார்த்து குடியேறிய எழில்…. செழியனுக்கு வந்த புதிய பிரச்சனை….!!!!
பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் கோபியை பாக்கியா திட்டி அனுப்பி விடுகிறார். அதன் பின்னர் ராமமூர்த்தி திருவுருவப்படத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சிக்கு வந்த எழில் மற்றும் அமிர்தா நிலா பாப்பாவை அழைத்து கொண்டு கிளம்ப தயாராகிறார்கள். அந்த சமயத்தில் தனியாக வீடு பார்த்திருப்பதாகவும் நீங்கள் வர வேண்டும் எனவும் எழில் கூறுகிறார்.

#image_title
அதனை தொடர்ந்து அடுத்த நாள் அமிர்தாவின் அம்மா பால் காய்ச்ச தேவையான பொருட்களை வாங்க செல்கிறார். ஆனால் அதற்குள்ளாகவே பாக்கியா செல்வியுடன் அனைத்து பொருட்களையும் வாங்கி கொண்டு அங்கு வந்து விடுகிறார். பின் அனைவரும் சேர்ந்து மகிழ்ச்சியாக பால் காய்ச்சுகிறார்கள்.

#image_title
அப்போது அமிர்தாவின் அம்மா பாக்கியாவிடம் நீங்கள் எதற்காக எழிலை வீட்டை விட்டு அனுப்புனீங்க? எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என வருந்துகிறார். அதற்கு பாக்கியா எழில் அந்த வீட்டில் இருந்தால் நிச்சயம் அவனால் நினைத்ததை சாதிக்க முடியாது. தொடர்ந்து தடைகள் வந்து கொண்டே தான் இருக்கும். நிச்சயம் அவன் சாதிச்சுட்டு மறுபடியும் அந்த வீட்டுக்கு வருவான் என கூறுகிறார். அதை கேட்டு எழில் ஆனந்த கண்ணீர் விடுகிறார்.

#image_title
அதே சமயத்தில் செழியன் போனில் மிகவும் கோபமாக பேசி கொண்டிருக்கிறார். அப்போது அங்கு ஜெனி வர போனை கட் செய்து விடுகிறார். அதற்கு ஜெனி என்னாச்சு என்று கேட்க ஆபிஸில் ஒரு பிரச்சனை திடீரென எல்லாரையும் வேலைய விட்டு தூக்குறாங்க. எங்க என் வேலையும் போயிடுமோனு பயமா இருக்கு என செழியன் கூறுகிறார். அதற்கு ஜெனி அதெல்லாம் ஒன்னும் ஆகாது நீ பயப்படாம உன் வேலைய பாரு என ஆறுதல் கூறுகிறார்.