Connect with us
   

Cinema

இனி அரசியலே வேண்டாம்…. பாஜகவில் இருந்து விலகிய பிரபல நடிகர்….!!!!

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என பலமுகங்களை கொண்ட ஆர்கே சுரேஷ் பிரதமர் மோடி மீது இருந்த ஈர்ப்பு காரணமாக பாஜகவில் இணைந்து அரசியலில் கவனம் செலுத்தி வந்தார். இந்த சூழலில் சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள அறிக்கை ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி அவர் கூறியிருப்பதாவது, “அரசியல் மற்றும் சினிமா என இரண்டிலும் ஒன்றாக கவனம் செலுத்த முடியவில்லை. மேலும் நான் அரசியலில் இருப்பதால் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது. அதோடு சினிமாவிலும் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை. இனி முழுக்க முழுக்க சினிமாவில் மட்டும் கவனம் செலுத்த இருப்பதால் அரசியலில் இருந்து விலக இருக்கிறேன்” என கூறியுள்ளார். எனவே ஆர்கே சுரேஷ் பாஜகவிலிருந்து விலக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Continue Reading

More in Cinema

To Top