Connect with us
   

Cinema

அஜித்தை அசிங்கப்படுத்திய பிரபல இயக்குனர்…. காத்திருந்து கதறவிட்ட அஜித்….!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் அஜித்தை ஆரம்ப காலத்தில் பிரபல இயக்குனர் ஒருவர் அசிங்கப்படுத்திய சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, “அஜித் வளர்ந்து வந்த சமயத்தில் ஒரு பெரிய இயக்குனரின் பிறந்தநாள் வந்தது. அதற்காக அவர் ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தார். அவர் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லலாமே என்று அஜித்தும் அந்த ஹோட்டலுக்கு சென்று நீண்ட நேரம் காத்துக்கொண்டிருந்தார். அஜித் காத்திருப்பது தெரிந்து அந்த இயக்குனர் அஜித்தை கண்டுகொள்ளவே இல்லை. பின் நீண்ட நேரம் கழித்து அந்த இயக்குனரின் உதவி இயக்குனர் வந்து அஜித்திடம், சார் இப்போ பிஸியா இருக்காங்க. பிறகு பார்க்கலாம் என்று சொல்ல சொன்னார்’ என கூறினார். அதை கேட்டு கடுப்பான அஜித், ‘ஒரு நாள் வரும்’ என்று மட்டும் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார். பின்னாளில் அஜித் பெரிய ஸ்டாராக வளர்ந்து விட்டார். அப்போது அதே இயக்குனர் அஜித்தை வைத்து ஒரு படம் எடுக்க முடிவு செய்து எவ்வளவோ முயற்சி செய்தார். ஆனால் அஜித் கடைசிவரை அந்த இயக்குனரோடு பணியாற்றவே இல்லை” என கூறியுள்ளார்.

Continue Reading

More in Cinema

To Top