Cinema
மோசமா கமெண்ட் பண்றாங்க…. மனசு வலிக்குது…. முதல் முறையாக மனம் திறந்த நடிகை பிரியா பவானி சங்கர்..!!
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து சாதித்த நடிகை என்றால் அது பிரியா பவானி சங்கர் தான். ஆரம்பத்தில் அடுத்தடுத்து ஹிட் கொடுத்த இவருக்கு சமீபகாலமாக தொடர்ந்து படங்கள் தோல்வியடைந்து வருகிறது. இதனால் ராசியில்லாத நடிகை என்றே முத்திரை குத்தப்பட்டு விட்டார். இந்நிலையில் பிரியா பவானி சங்கர் சில விஷயங்களை மிகவும் வெளிப்படையாக பேசியுள்ளார். அதன்படி அவர் கூறியிருப்பதாவது, “யாருக்காவது ஹேப்பி பர்த்டே போஸ்ட் போட்டாலே போதும் எனக்கும் அந்த நடிகருக்கும் இடையே காதல் என கிசுகிசு எழுதிடுறாங்க. ஹரிஷ் கல்யாண், அசோக் செல்வன்லாம் என்னோட நல்ல நண்பர்கள். ஒருத்தர் கூட சேர்ந்து போட்டோ போட்டாலே ரொம்ப மோசமா கமெண்ட் போடுறாங்க. மனசு தாங்க மாட்டேங்குது” என கூறியுள்ளார். மேலும் அடுத்தாண்டு தனது காதலரை திருமணம் செய்ய இருப்பதாக அவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது