
Television
பாக்கியாவை போட்டுக்கொடுத்த செஃப்…. ரெஸ்டாரெண்ட்டிற்கு சீல் வைத்த அதிகாரிகள்….!!!!
பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா ரெஸ்டாரெண்ட் முன்பு குவிந்த மக்கள் தொடர்ந்து பிரச்சனை செய்கிறார்கள். அதை டிவியில் பார்க்கும் ஈஸ்வரி இனியா மற்றும் ஜெனி அதிர்ச்சியாகிறார்கள். அம்மாவ எதாவது பண்ணிட போறாங்க என்று இனியா அழ தொடங்குகிறார்.

#image_title
அப்படிலாம் எதுவும் ஆகாது நான் நேர்ல போய் பாக்குறேன் என்று கூறி செழியன் செல்கிறார். அப்போது பாக்கியா ரெஸ்டாரெண்ட் வாசலில் கோபி நிற்கிறார். அவரை பார்த்து நீங்க இங்க என்ன பண்றீங்க என செழியன் கேட்க டிவியில் நியூஸ் பார்த்து பதறியடித்து வந்ததாக நாடகமாடுகிறார் கோபி.

#image_title
பின் டிவியில் செய்தியை பார்த்து ஷாக்காகும் அமிர்தா உடனே எழிலுக்கு போன் செய்ய அவரும் ரெஸ்டாரெண்ட் செல்கிறார். பின் பழனிச்சாமியும் அங்கு வர அனைவரும் சேர்ந்து கூட்டத்தை கட்டுப்படுத்துகிறார்கள். பிரியாணிக்கான பணத்தை திரும்ப தருவதாக பாக்கியா கூறி பின்னர் அங்கிருந்து கூட்டம் கலைந்து போகிறது.

#image_title
அதனை தொடர்ந்து அங்கு வரும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் செஃப் ஆனந்திடம் சமைக்கும்போது கறி கெட்டுப்போனது உங்களுக்கு தெரியவில்லையா? என்று கேட்க நான் அப்போவே சொன்னேன் மேடம் தான் கேட்கல என்று ஆனந்த் பொய் கூறுகிறார். பின் சோதனை செய்யும் அதிகாரிகள் எல்லாம் ஓகே கறி மட்டும் தான் கெட்டு போயிருக்கு அதனால 3 நாள் உங்க கடைக்கு சீல் வைக்கிறோம் என்று கூறுகிறார்கள்.