
General
பேருந்து நிலையத்தில் கூலாக சிகரெட் பிடித்த மாணவிகள்…. தடம் மாறும் மாணவ சமுதாயம்….!!!!
நம் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே சிறார்கள் குற்ற செயல்களில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதுவும் குறிப்பாக அரசுப்பள்ளி மாணவ மாணவிகள் செய்யும் செயல்களை நாம் நாள்தோறும் சோசியல் மீடியாவில் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம்.

#image_title
சமீபத்தில் கூட பள்ளி மாணவிகள் சிலர் வகுப்பறையில் மது அருந்திய சம்பவம், பள்ளி வளாகத்தில் வளைகாப்பு நடத்திய சம்பவம் மற்றும் மாணவர்கள் சிலர் கஞ்சா புகைத்த சம்பவம் இப்படி நிறைய புகார்களை கூறலாம். அந்த வரிசையில் தற்போது புதிதாக ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
அதன்படி கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள சேத்தியாத்தோப்பு பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருக்கும் பள்ளி மாணவிகள் இரண்டு பேர் பள்ளி சீருடையுடன் நின்று மிகவும் கூலாக சிகரெட் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். அங்கு இருக்கும் பொதுமக்கள் குறித்து அந்த மாணவிகள் கொஞ்சம் கூட பதற்றமடையவில்லை என்பதுதான் அதிர்ச்சி.
இந்த வீடியோவை பார்த்து ஒட்டுமொத்த பெற்றோர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். மேலும் அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் திறனும் ஒழுக்கமும் மேம்படுத்த அரசு நிஜமாகவே நடவடிக்கை எடுக்கிறதா? அரசுப்பள்ளியின் தரத்தை உயர்த்த முயற்சி செய்கிறார்களா? என்பது போன்ற பல கேள்விகள் எழுந்து வருகின்றன.