
Television
பிக்பாஸ் வீட்டில் ஆணாதிக்கம்…. கதறி அழுத பெண்கள்…. சர்ச்சையாகும் ப்ரோமோ….!!!!
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த வாரம் தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த முறை கமல்ஹாசனுக்கு பதிலாக நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். அதேபோல் இந்த முறை பிக்பாஸ் வீட்டிலும் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

#image_title
அந்த வகையில் ஆண்கள் வீடு பெண்கள் வீடு என தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் வீட்டில் வார வாரம் ஒரு தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவர். அந்த வகையில் நேற்று நடைபெற்ற டாஸ்கில் வெற்றி பெற்று சத்யா தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து ஷாப்பிங் டாஸ்க் நடைபெற்றது.
இதில் தங்களிடம் உள்ள பணத்திற்கு அதிகமாக ஆண்கள் அணியினர் ஷாப்பிங் செய்ததால் அவர்களுக்கு இந்த வாரத்திற்காக ஷாப்பிங் செய்த மளிகை பொருட்கள் வழங்கப்படாது என பிக்பாஸ் அறிவித்தார். அதேசமயம் பெண்கள் அணியினர் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட கம்மியாக ஷாப்பிங் செய்ததால் அவர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

#image_title
ஆனால் கிச்சன் ஆண்கள் அணியின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அங்கு சென்று சமைக்க வேண்டும் என்றால் ஆண்கள் அணியினரை கேட்டுவிட்டு தான் பெண்கள் அணி உள்ளே செல்ல வேண்டும். அப்படி அனுமதி கேட்கும் போது அவர்களுக்கு ஆண்கள் அணியினர் சில டாஸ்குகளை கொடுப்பது வழக்கம்.
அந்த வகையில் தற்போது அவர்கள் கொடுத்துள்ள டாஸ்க் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது. அதன்படி ஆண்கள் அணியை சேர்ந்த முத்துக்குமரன், பெண்கள் அணியில் இருந்து ஜாக்குலின், சாச்சனா ஆகிய இருவரை மட்டுமே சமைக்க அனுப்புவோம். அவர்கள் இருவரும் சமைப்பதோடு ஆண்கள் அணியினர் சாப்பிட்ட பாத்திரங்களையும் கழுவ வேண்டும் என கூறினார்.

#image_title
இதை கேட்டு கோபமடைந்த பெண்கள் அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். அப்போது சாச்சனா, உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா என்று கண்ணீர்விட்டு அழுகிறார். இதை பார்க்கும் பார்வையாளர்கள் பெண்களை இப்படி கொடுமைப்படுத்துவது நியாயமா? என கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் பிக்பாஸ் வீட்டில் ஆணாதிக்கம் தலை ஓங்குவதாக விமர்சித்து வருகிறார்கள்.