
Television
பாக்கியாவை அசிங்கப்படுத்தும் கோபி…. சவால் விட்ட பாக்கியா ஜெயித்து காட்டுவாரா…???
பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் பிரியாணி ஆர்டர் கொடுத்த கணக்குகளை பாக்கியா பார்க்க கைவசம் இரண்டு லட்சம் மட்டுமே உள்ளது. எப்படி பார்த்தாலும் அதிக தொகை கொடுக்க வேண்டி இருப்பதால் என்ன செய்வதென தெரியாமல் பாக்கியா யோசிக்கிறார்.

#image_title
அப்போது இனியா அங்கு வர ஏதாவது உதவி செய்யட்டுமா என்று கேட்கிறார். அதற்கு பாக்கியா வேண்டாம் நாம் பார்த்துக்குறேன் நீ தூங்கு என்று கூறிவிட்டு ஹாலுக்கு வருகிறார். அங்கு ஈஸ்வரி அழுது கொண்டிருக்கிறார். பாக்கியா அவரை சமாதானம் செய்ய போகிறார். அப்போது ஈஸ்வரி எல்லாம் என்னால தான் நான் அதை தொடங்கி வச்சிருக்க கூடாது. நான் ஒரு ராசி இல்லாதவ என்று புலம்புகிறார்.

#image_title
அதனை தொடர்ந்து அடுத்த நாள் காலை பாக்கியா மற்றும் செல்வி இருவரும் வாக்கிங் செல்கிறார்கள். அப்போது அங்கு வரும் கோபி மிகவும் நக்கலாக பேசுகிறார். உன்னால எதுவுமே முடியாது. நீ ஒரு ஜீரோ. உனக்கு இதெல்லாம் செட்டாகாது. நீ மறுபடியும் அடுப்படிக்கே போ என்று திமிராக பேசுகிறார்.

#image_title
அதை கேட்டு கடுப்பான பாக்கியா எனக்கு தொழில்ல பெரிய சாம்ராஜ்யம் அமைக்கணும்னு ஆசை இல்ல. ஆனா நீங்க எதெல்லாம் என்னால முடியாதுன்னு சொன்னிங்களோ அதை எல்லாம் நான் கண்டிப்பா பண்ணுவேன். நான் சாதிப்பேன் என பாக்கியா சவால் விடுகிறார். அதற்கு கோபி உன்னால எதுவும் பண்ண முடியாது என கூறுகிறார்.

#image_title
பின் வீட்டுக்கு வரும் பாக்கியாவிடம் செல்வி ரெஸ்டாரெண்ட் கரன்ட் பில் கட்ட வேண்டும் என்று சொல்ல அபராதம் மற்றும் கரன்ட் பில்லை சேர்த்தாலே ஒரு லட்சம் வருகிறது என்று பாக்கியா ஷாக்காகிறார். அந்த சமயத்தில் வீட்டுக்கு வரும் ஜெனியின் அம்மா மரியம் ஜெனி கர்ப்பமானதில் இருந்தே இந்த வீட்டில் பிரச்சனை மேல பிரச்சனையாக வருகிறது என்று கூற பாக்கியா என்ன சொல்தென தெரியாமல் தவிக்கிறார்.