Television
கோபிக்கு ஷாக் கொடுத்த குடும்பம்… எழிலை ஏற்றுக்கொண்ட ஈஸ்வரி…!!!
பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் இரவு 12 மணிக்கு எழுந்து ராமமூர்த்திக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுகிறார் ஈஸ்வரி. மேலும் சாக்லேட் ஒன்றையும் கொடுக்கிறார். அதனை தொடர்ந்து இருவரும் சிரித்து பேசுகிறார்கள். பின் காலையில் பாக்கியா சாமி கும்பிட்டு விட்டு ராமமூர்த்திக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகிறார்.

#image_title
அவரை தொடர்ந்து வீட்டில் உள்ள அனைவரும் வரிசையாக ராமமூர்த்தி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகிறார்கள். அந்த சமயத்தில் ராமமூர்த்தி போனை பார்த்து ஃபீல் செய்கிறார். உடனே ஈஸ்வரி என்னாச்சு என்று கேட்க எழில் ஒரு போன் கூட பண்ணல என கலங்குகிறார். அதற்கு ஈஸ்வரி ஆறுதல் கூறுகிறார். பின் செழியன் பாக்கியாவிடம் எழிலுக்கு போன் பண்ணிங்களா? அவன் வருவானா இல்லையா? என கேட்கிறார். அதற்கு பாக்கியா அவன் கண்டிப்பா வருவான் என கூறி விட்டு செல்கிறார்.

#image_title
பின் இனியாவும் ஜெனியும் எழில் இல்லாதது வருத்தமாக இருப்பதாக கூறி பேசுகிறார்கள். அதை கேட்ட ஈஸ்வரி எழில் கண்டிப்பா நேரில் வந்து வாழ்த்து சொல்லுவான் என கூறுகிறார். பின் அனைவரும் காரில் ஏறி கோவிலுக்கு கிளம்புகிறார்கள். அதை பார்த்த கோபி எழில் வீட்டை விட்டு வெளிய போய் கஷ்டப்பட்டுட்டு இருக்கான். இவங்க குடும்பத்தோட சந்தோசமா எங்கயோ கிளம்புறாங்க என கடுப்பாகி செழியன் மற்றும் இனியாவிற்கு போன் செய்கிறார். ஆனால் அவர்கள் இருவருமே போன் எடுக்காததால் கடுப்பாகிறார்.