
Television
பாக்கியாவை வீழ்த்த சதி திட்டம் போடும் கோபி…. வலையில் சிக்குவாரா பாக்கியா….????
பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் இனியாவை காலேஜில் விடுவதற்காக சென்ற ஈஸ்வரியிடம் கோபி சென்டிமென்ட்டாக பேசி அவர் பக்கம் இழுக்க முயற்சிக்கிறார். ஆனால் ஈஸ்வரியோ கோபியை அசிங்கப்படுத்தி அனுப்பி விடுகிறார். இதனால் கடுப்பான கோபி அவர் அம்மா சொன்னதை நினைத்து புலம்பி கொண்டிருக்கிறார்.

#image_title
மேலும் இதற்கெல்லாம் அந்த பாக்கியா தான் காரணம் நான் அவள சும்மா விடமாட்டேன். தடம் தெரியாம அழிக்க போறேன் என்றெல்லாம் பேசுகிறார். அதை கேட்ட ராதிகா நமக்கெதுக்கு இதெல்லாம். நமக்குனு ஒரு குடும்பம் இருக்கு. அதனால நம்ம குடும்பத்தோட சந்தோசமா இருக்குற வழிய மட்டும் பார்க்கலாம் என கூறுகிறார்.

#image_title
ஆனாலும் கோபி பாக்கியாவை பழி வாங்குவது குறித்து மட்டுமே யோசிக்கிறார். இதற்கிடையில் பாக்கியா அவரது ரெஸ்டாரெண்ட்டில் அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டு செய்து கொண்டிருக்கிறார். அதை பார்த்த பழனிச்சாமி பாக்கியாவை அழைத்து அட்வைஸ் கூறுகிறார். மேலும் சமையலுக்கு ஒரு செஃப் வைத்து கொள்ளுமாறு ஐடியா தருகிறார்.

#image_title
பாக்கியாவும் யோசித்து பார்த்து அந்த ஐடியா நன்றாக இருப்பதால் செஃப் வைத்துக்கொள்ள சம்மதிக்கிறார். இதனை தொடர்ந்து வெளியான ப்ரோமோவில் கோபி அவருக்கு செஃப்பை பாக்கியா ரெஸ்டாரெண்ட்டிற்கு அனுப்பி அவரின் ஹோட்டலை மூட ஏதோ சதி திட்டம் போடுகிறார். இந்த சதி வலையில் பாக்கியா விழுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.