
General
விஜய் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்…. அடுத்த பஞ்சாயத்தை கூட்டிய இந்து மக்கள் கட்சி…!!!
நடிகரும் தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவருமான விஜய் இளைஞர்கள் மத்தியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமென இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் டி.குருமூர்த்தி கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, “தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசிய போது, ‘
இளைஞர்களை வேலையை விட்டு விட்டு மாநாட்டுக்கு வர வேண்டும் என கூறியுள்ளார். அதேபோல் கும்பகோணத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கேள்வி கேட்டதற்காக பெண் ஒருவரை அறைக்குள் வைத்து பூட்டினார்கள். எனவே தமிழக இளைஞர்கள் மத்தியில் விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும். மாநாட்டிற்கு முன்பாக மன்னிப்பு கேட்காத பட்சத்தில், இந்து மக்கள் கட்சி சார்பில், சென்னையில் உள்ள நடிகர் விஜய்யின் வீட்டை முற்றுகையிடுவோம்” என கூறியுள்ளார்.