General
கேள்வி கேட்ட அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர்…. மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்தாரா நிர்மலா சீதாராமன்….????
முன்னதாக கோவையில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசினார். அப்போது அந்த கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் மற்றும் தொழிலதிபர் சீனிவாசன், உணவுகளுக்கு தனித்தனி ஜிஎஸ்டி இருப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து சுட்டிக் காட்டினார். மேலும் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தனது ஹோட்டலுக்கு வரும்போதெல்லாம் பிரச்சனை செய்வதாகவும் கூறி இருந்தார். இந்த வீடியோ வைரலான நிலையில் தற்போது நேற்று கோவையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வானதி சீனிவாசனை சந்தித்த அன்னப்பூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன், “மன்னிச்சுக்கோங்க நான் எந்த கட்சியையும் சேர்ந்தவன் அல்ல” என பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலான நிலையில் பலரும் அவரை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்திருப்பதாக விமர்சித்து வருகிறார்கள்.
“தயது செஞ்சு மன்னிச்சிக்கோங்க.. நான் எந்த கட்சியையும் சேர்ந்தவன் இல்லை”
– கோவையில் ஜிஎஸ்டி குறித்து கேள்வி எழுப்பிய அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் நேரில் சந்திப்பு#NirmalaSitaraman | #GST | #Annapoorna | #VanathiSrinivasan pic.twitter.com/uHvkGqF41C
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) September 12, 2024