General
52 ஆண்டுகளுக்கு பின் ஹாக்கியில் சாதனை படைத்த இந்தியா…???
ஒலிம்பிக் வரலாற்றில் 52 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த 1972ஆம் ஆண்டு முனிச்சில் நடந்த ஒலிம்பிக் தொடரில் ஆஸ்திரேலியா ஹாக்கி அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. ஆனால் அதன்பின் நடந்த ஒலிம்பிக் தொடரில் ஒருமுறை கூட இந்திய ஹாக்கி அணியால் ஆஸ்திரேலியாவை வீழ்த்த முடியவில்லை. இந்நிலையில் தற்போது கிட்டத்தட்ட 52 ஆண்டுகள் பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடரில் ஹர்மன்ப்ரீத் சிங் தலைமையிலான இந்திய ஹாக்கி அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் குரூப் சுற்றில் 3 வெற்றி, ஒரு டிரா மற்றும் ஒரு தோல்வியுடன் இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.