
General
அமைச்சர் முன்பு நடித்து அசத்திய இன்ஸ்டா பிரபலம் திவாகர்…. வியந்து பார்த்த அமைச்சர்…!!!
இன்ஸ்டாகிராம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக வலம் வருபவர் தான் பிசியோதெரபி மருத்துவர் திவாகர். இவர் படங்களில் வரும் காட்சிகளை நடித்து காட்டி ரீல்ஸ் செய்து வருகிறார். ஆனால் இவரை பலரும் டிரோல் செய்து தான் வருகிறார்கள். இந்த சூழலில் தான் திவாகர் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பணை சந்தித்துள்ளார். மேலும் அமைச்சர் முன்பு வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் வரும் நடிகர் திலகம் சிவாஜி பேசும் புகழ்பெற்ற வசனத்தை பேசி காட்டினார். அதனை தொடர்ந்து கஜினி சூர்யா, அந்நியன் விக்ரம் மற்றும் 3 தனுஷ் ஆகிய காட்சிகளையும் நடித்து அசத்தினார். இவை அனைத்தையும் அமைச்சர் மிகவும் அமைதியாக பார்த்து ரசித்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
கட்டபொம்மன் போல் கலக்கிய பிரபலம் – வியந்து பார்த்த அமைச்சர்!
அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் முன்பு வீரபாண்டியன் கட்டபொம்மன் மற்றும் ஜாக்சன் துரை போல் ஆக்டிங் செய்து காட்டிய ரீலீஸ் பிரபலம் திவாகர்#krperiyakarupan #diwagar #reels #viralvideo pic.twitter.com/XXrUnoboLl
— Srilibiriya Kalidass (@srilibi) October 3, 2024