Cinema
பாடகியுடன் தொடர்பு… ஜெயம் ரவி விவாகரத்திற்கு இதுதான் காரணமா..? வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!
பிரபல நடிகர் ஜெயம் ரவி அவரின் காதல் மனைவி ஆர்த்தியை பிரிவதாக சமீபத்தில் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதனை தொடர்ந்து ஜெயம் ரவி வெளியிட்ட அறிக்கை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என ஆர்த்தி அதனை மறுத்து ஒரு அறிக்கை வெளியிட்டார். இப்படி இந்த விவகாரம் சென்று கொண்டிருக்கும் நிலையில் இவர்களின் விவாகரத்திற்கு முக்கிய காரணமாக பாடகி ஒருவரை கூறி வருகிறார்கள். அவர் வேறு யாருமல்ல பாடகி கெனிஷா தான். இந்தாண்டு தனது திருமண நாளில் கூட ஜெயம் ரவி ஆர்த்தியிடம் ஷூட்டிங் என்று பொய் சொல்லிவிட்டு கெனிஷா உடன் தான் கோவாவில் லூட்டி அடித்தாராம். அதேபோல கோவாவில் தனியாக பங்களா ஒன்றில் இருவரும் குடும்பம் நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. இருப்பினும் இந்த தகவல்கள் எதுவும் இப்போது வரை உறுதி செய்யப்படவில்லை.