General
விண்வெளியில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் உடல்நலம் பாதிப்பா…???
கடந்த ஜூன் 7 ஆம் தேதி இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகிய இருவரும் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர். ஒரு வார காலத்தில் இருவரும் பூமிக்கு திரும்புவதாக இருந்தது. ஆனால் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இன்னும் அவர்கள் பூமிக்கு திரும்ப முடியவில்லை. இந்நிலையில் புவீயீர்ப்பு சக்தி இல்லாத இடங்களில் மனிதர்கள் அதிக நாட்கள் இருப்பது உடல்நலனை பாதிப்புக்கும். மேலும் உடல் தசைகள் பலவீனமடையும், எலும்புகள் விரைவான விகிதத்தில் கால்சியத்தை இழக்கும். இது எலும்பு அடர்த்தி மற்றும் தசை வலிமையை குறைக்கும். இது பூமியின் ஈர்ப்பு விசைக்கு திரும்பும்போது சில அபாயங்களை ஏற்படுத்தும்” என மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும்போது அவர் உடல்நலனில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.