Cinema
விரைவில் உருவாகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பயோபிக்…. ஒளிவு மறைவு இல்லாமல் எடுக்கப்படுமா…???
சூப்பர் ஸ்டார் ரஜினியை தெரியாத நபர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு ஒட்டுமொத்த இந்திய திரையுலகிலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதேபோல ரஜினி இந்த வயதிலும் ஹீரோவாகவே நடித்து வருகிறார்.

#image_title
கிட்டத்தட்ட 169 படங்களில் நடித்து முடித்துள்ள ரஜினியின் 170வது படமான வேட்டையன் விரைவில் வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து தற்போது அவர் 171 வது படமான கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.
இந்நிலையில் ரஜினியன் பயோபிக் படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இசைஞானி இளையராஜாவின் பயோபிக் படம் தற்போது உருவாகி வருகிறது. இதில் தனுஷ் ஹீரோவாக நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து ரஜினியின் பயோபிக் படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

#image_title
மேலும் இந்த படத்தை பிரபல பாலிவுட் இயக்குனரும் தயாரிப்பாளருமான சஜித் நதியத்வாலா தயாரிக்க உள்ளாராம். இவர் ஏற்கனவே 83, சூப்பர் 30, கிக் ஆகிய படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது ரஜினி இதற்கு சம்மதம் தெரிவித்து விட்டதாகவும், கதை எழுதும் பணி தொடங்கி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
முன்னதாக ஒருமுறை ரஜினி அவரின் வாழ்க்கை வரலாறை சுயசரிதையாக எழுத நினைத்து அதற்கான பணிகளை தொடங்கினார். ஆனால் அதை பாதியிலேயே விட்டு விட்டார். எதற்காக என பாலச்சந்தர் கேட்டபோது வரலாறை எழுதும்போது அதில் உண்மை இருக்க வேண்டும். எனக்கு அந்த தைரியம் இல்லை என்று கூறியிருந்தார்.

#image_title
இப்படி உள்ள சூழலில் ரஜினியின் பயோபிக் படம் மட்டும் உருவாவது எப்படி சாத்தியம். பயோபிக் படம் என்றாலும் அதில் அவரின் வாழ்க்கையில் நடந்த அத்தனை சம்பவங்களையும் காட்ட வேண்டும் அல்லவா? இப்போது மட்டும் ரஜினிக்கு தைரியம் வந்து விட்டதா? அல்ல சிலவற்றை காட்டாமல் மறைத்து விடுவார்களா என்று தெரியவில்லை.