Connect with us
   

Television

கமெண்ட் போட்டு காதலை உறுதி செய்த பிக்பாஸ் அர்ச்சனா….!!!!

ஆரம்ப காலத்தில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த அர்ச்சனா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியலின் இரண்டாம் பாகத்தில் வில்லியாக நடித்தார். இவ்வளவு இளம் வயதில் வில்லியாக நடிப்பது அவரின் கெரியரை பாதிக்கும் என பலரும் கூறினார்கள்.

#image_title

ஆனாலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட அர்ச்சனா அந்த கேரக்டரில் சிறப்பாக நடித்து பிரபலமானார். அதன் காரணமாக அவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைக்கவே வைல்ட் கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்தார். ஆரம்பத்தில் சில நாட்கள் அழுத கொண்டிருந்த அர்ச்சனா அதன் பின்னர் தான் விளையாட தொடங்கினார்.

தனி ஒரு பெண்ணாக இருந்து அவரை கார்னர் செய்த அத்தனை பேரையும் அசால்ட்டாக கையாண்ட அர்ச்சனா பட்டம் வென்ற முதல் வைல்ட் கார்டு போட்டியாளர் என்ற பெருமையை பெற்றார். அதுமட்டுமல்ல இதன் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள்.

#image_title

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தற்போது வரை எந்த ஒரு புதிய ப்ராஜெக்ட்டிலும் கமிட்டாகாத அர்ச்சனா அவ்வபோது சோசியல் மீடியாவில் புகைப்படத்தை மட்டும் பதிவு செய்வார். இந்நிலையில் ஒரே ஒரு கமெண்ட் செய்து ரசிகர்கள் மத்தியில் வசமாக மாட்டிக் கொண்டார்.

அதாவது ஏற்கனவே அர்ச்சனா மற்றும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் அருண்பிரசாத் ஆகிய இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் வெளியாக வந்தன. இந்நிலையில் தற்போது அதனை உறுதி செய்யும் விதமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது.

#image_title

அதாவது அருண் பிரசாத் சமீபத்தில் போட்டோ ஷூட் ஒன்று நடத்தி இருந்தார். அதற்கு அர்ச்சனா என்னுடைய ஹீரோவை போட்டோ எடுத்ததற்கு நன்றி என்று அந்த போட்டோ கிராபருக்கு நன்றி தெரிவித்து கமெண்ட் செய்துள்ளார். இதனை கண்ட பலரும் அப்போ அது உண்மைதான் போல என கூறி வருகிறார்கள்

Continue Reading

More in Television

To Top