
General
விஜய்யின் மாநாட்டில் பங்கேற்கும் முதல்வர்….???? அவரே கூறிய தகவலால் ரசிகர்கள் உற்சாகம்….!!!!
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு வரும் 27 ஆம் தேதி விக்கிரவாண்டியில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. சமீபத்தில் இந்த மாநாட்டிற்காக பூமி பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து பிற ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் விஜய் நடத்தும் இந்த முதல் மாநாட்டிற்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். மேலும் இந்த மாநாட்டில் பங்கேற்பது குறித்து, “விஜய் மாநாட்டிற்கு அழைத்தால் பார்க்கலாம்” என கூறியுள்ளார். ஏற்கனவே ஒருமுறை விஜய் மற்றும் புஸ்ஸி ஆனந்த் இருவரும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை நேரில் சென்று சந்தித்து இருந்தனர். இப்படி உள்ள சூழலில் புதுவை முதல்வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்து இருப்பது அரசியலில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.