General
பயங்கரவாதியை சந்தித்தாரா ஒலிம்பிக் வீரர்…. புகைப்படத்தால் வெடித்த சர்ச்சை…!!!
சமீபத்தில் நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் முதல் முறையாக பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நசீம் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார். இந்நிலையில் அர்ஷத் நசீம் பயங்கரவாதி ஒருவருடன் அமர்ந்து பேசும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி அமெரிக்காவால், பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டிருக்கும் முகமது ஹரிஸ் தார் என்பவருடன் தான் அர்ஷத் நசீம் ஒன்றாக அமர்ந்து பேசியுள்ளார். இந்த முகமது என்பவர் மிலி முஸ்லிம் லீக் கட்சியின் இணைச் செயலாளராக உள்ளார். இது லஷ்கர் – இ – தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் சார்பில் இயங்கும் அரசியல் கட்சி என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் அர்ஷத் நசீம் இவரை சந்தித்து இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

#image_title