Cinema
அண்ணாமலையையும் விட்டு வைக்கலையா…??? விரைவில் உருவாகும் பயோபிக்…. ஹீரோ யார் தெரியுமா….????
திரையுலகில் சாதித்தவர்கள் அல்லது அரசியல் தலைவர்கள் என இதுவரை தமிழ் சினிமாவில் எத்தனையோ பேரின் பயோபிக் படங்கள் உருவாகியுள்ளன. அந்த வரிசையில் தற்போது கூட இசைஞானி இளையராஜாவின் பயோபிக் படம் உருவாகி வருகிறது. அதில் நடிகர் தனுஷ் நடித்து வருகிறார்.

#image_title
இதை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பயோபிக் படம் கூட உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவரான அண்ணாமலையின் பயோபிக் படம் விரைவில் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வந்த அண்ணாமலை அதை விட்டு விட்டு மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் அரசியலுக்கு வந்தவர். அதுமட்டுமல்ல தற்போது இருக்கும் அரசியல்வாதிகளில் மிகவும் இளமையான அரசியல்வாதி என்றால் அது அண்ணாமலை மட்டுமே.

#image_title
இந்நிலையில் இவரின் பயோபிக்கை படம் எடுக்க தமிழ் சினிமா திட்டமிட்டு வருகிறது. மேலும் அண்ணாமலை கேரக்டரில் நடிக்க கூடிய ஒரே ஹீரோ நம்ம விஷால் தான் என பலரும் அவரை பரிந்துரை செய்து வருகிறார்கள். ஆனால் இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.
அதுமட்டுமின்றி இந்த பயோபிக் படத்தை இயக்கப்போவது யார்? தயாரிப்பாளர் யார்? என்பது போன்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் விஷால் தான் இந்த படத்தில் அண்ணாமலையாக நடிப்பார் என்று திட்டவட்டமாக கூறி வருகிறார்கள். ஏனெனில் இருவருக்கும் தோற்றம் ஓரளவிற்கு ஒத்துப்போவதால் விஷால் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது.