
Television
பாக்கியாவிடம் மன்னிப்பு கேட்டு கதறி அழுத ஈஸ்வரி….. கோபியிடம் ராதிகா கேட்ட அந்த கேள்வி….!!!!
பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா எவ்வளவு கெஞ்சியும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பாக்கியாவின் ரெஸ்டாரெண்ட்டிற்கு சீல் வைக்கிறார்கள். மேலும் 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கிறார்கள். இதனால் பாக்கியா ஷாக்காகிறார்.

#image_title
அதனை தொடர்ந்து எழில் மற்றும் செழியனிடம் பேசும் பாக்கியா உங்களுக்கு சமைக்கிற மாதிரி தான பார்த்து பார்த்து சமைப்பேன். இப்போ நான் என்ன சொன்னா எல்லாரும் நம்புவாங்க. நான் வேணும்னா இந்த பிரியாணிய சாப்பிடட்டுமா என்று கேட்கிறார். உடனே பழனிச்சாமி பாக்கியாவை சமாதானம் செய்து அவரை வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார்.

#image_title
பாக்கியா வீட்டிற்கு வந்ததும் அவரை பார்த்து கதறி அழுத ஈஸ்வரி என்னை மன்னிச்சிடு பாக்கியா எல்லாத்துக்கும் நான் தான் காரணம். நான் ஆரம்பிச்சு வச்சதால தான் இப்படி நாசமா போயிடுச்சு என்று கூறுகிறார். அதற்கு பாக்கியா அப்படிலாம் எதுவும் இல்லை அத்தை என்று அவரை சமாதானம் செய்கிறார்.

#image_title
அந்த சமயத்தில் கோபி அவரது போனில் பாக்கியா ரெஸ்டாரெண்ட் சீல் வைக்கப்பட்டதை நியூஸ் சேனலில் பார்த்து ரசித்து கொண்டிருக்கிறார். அப்போது வீட்டிற்கு வரும் ராதிகா இந்த விஷயம் குறித்து கோபியிடம் பேசுகிறார். பின் இதற்கும் உங்களுக்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா என்று ராதிகா கேட்க அதை கொஞ்சமும் எதிர்பாராத கோபி ஆடிபோகிறார்.

#image_title
பின்னர் அவளுக்கு இப்படிலாம் நடக்கனும்னு நான் நினைச்சிருக்கேன். ஆனா அதுக்காக நான் எதுவும் பண்ணல என்று கூறி கோபி எஸ்கேப்பாகிறார். அடுத்ததாக பாக்கியா அழுவது கொண்டிருப்பதால் எந்த பிரயோஜனமும் இல்லை என்பதை உணர்ந்து பிரியாணி ஆர்டர் தொடர்பான கணக்குகளை பார்க்கிறார். அதில் பல லட்சம் கொடுக்க வேண்டி இருப்பதால் அதிர்ச்சி அடைகிறார்.