
General
திருமணமாகாத பெண்கள் பொது சொத்தா…??? மதபோதகரின் பேச்சால் வெடித்த சர்ச்சை….!!!
பாகிஸ்தானில் பிரபல இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் தற்போது பேசியுள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரின் வீடியோ வைரலான நிலையில் பலரும் அவரை மோசமாக விமர்சித்து வருகிறார்கள்.

#image_title
அதன்படி அவர் கூறியதாவது, “திருமணமாகாத பெண் எந்த வகையிலும் மதிக்கப்பட வாய்ப்பே இல்லை. எனவே, அவர்களுக்கு இரண்டு வழிகள் உள்ளன. முதல் வழி, ஏற்கனவே மனைவி இருக்கும் ஒருவரை திருமணம் செய்து கொள்வது அல்லது அவள் ‘பஜாரி அவுரத்’ ஆவாள். அதாவது பொது சொத்தாகிவிடுவாள்.

#image_title
என்னிடம் இதைவிட சிறந்த வார்த்தை இல்லை. எனவே திருமணமாகாத ஒரு பெண்ணிடம் இந்த காட்சியை நான் முன்வைத்தால், எந்தவொரு மரியாதைக்குரிய பெண்ணும் முதல் விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பார்” என கூறியுள்ளார். இவரின் இந்த கருத்துக்கு கடும் கண்டனம் எழுந்து வருகிறது.