
General
உதயநிதி டி-சர்ட் போட்டால் நாங்கள் வழக்கு தொடர்வோம்… ஜெயக்குமார் அதிரடி….!!!!
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அரசு நிகழ்ச்சிகளுக்கு டி-சர்ட் அணிந்து செல்வதாக குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது, “துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அரசு நிகழ்ச்சிக்கு சட்டை போடாமல் டி சர்ட் போட்டு அதில் கட்சி சின்னத்தை பதிவு செய்து வருகிறார். ஏன் அவரிடம் சட்டை இல்லையா? சட்டை இல்லை என்றால் நாங்கள் வாங்கி தருகிறோம். அரசு நிகழ்ச்சிக்கு யாராவது டி சர்ட் அணிந்து செல்வார்களா? உலகிலேயே அரசு நிகழ்ச்சிக்கு டி சர்ட் அணிந்து செல்வது உதயநிதி தான். டி சர்ட் போடுவதை நான் குறை சொல்லவில்லை. கட்சி நிகழ்ச்சிக்கு மட்டும் போட்டு செல்லுங்கள். கண்ணியம் என ஒன்று இருக்கிறது. அதை பின்பற்ற வேண்டும். இனியும் உடை விஷயத்தை உதயநிதி இப்படியே தொடர்ந்தால் அதிமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்” என கூறியுள்ளார்.