General
இனி ஒருபோதும் பாஜகவை மக்கள் ஏற்க மாட்டார்கள்…. ஜெயக்குமார் காட்டம்….!!!
அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட விவகாரம் பெரியளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பதாவது, “அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் எந்த விதத்திலும் தவறாக பேசவில்லை. தங்கள் தொழிலில் சந்திக்கும் சில பிரச்சனைகளை தான் கோரிக்கையாக முன் வைத்தார். அதற்காக அவரை அழைத்து மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்திருப்பது தமிழ்நாட்டு மக்களையே கேவலப்படுத்தும் செயல். மேலும் அதை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டிருப்பது பாசிசத்தின் உச்சம். கோயம்புத்தூர் மக்கள் பாசத்தில் மட்டுமல்ல ரோசத்திலும் அதிகமானவர்கள் தான். இனி எந்த காலத்திலும் தமிழக மக்கள் பாஜகவை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்” என காட்டமாக கூறியுள்ளார்.