
Cinema
தியேட்டரில் ஃபயர் விட்ட ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள்…. ஆங்காங்கே நேர்ந்த விபத்துகள்….!!!
பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகியுள்ள தேவாரா படம் இன்று வெளியாகி உள்ளது. இந்நிலையில் ஜூனியர் என்டிஆரின் தீவிர ரசிகர்கள் செய்துள்ள முரட்டு சம்பவங்களால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். அதன்படி முதலில் தியேட்டர் வாசலில் ஆட்டை பலி கொடுத்து அதன் ரத்தத்தை வைத்து என்டிஆர் கட் அவுட்டிற்கு அபிஷேகம் செய்தனர். அதனை தொடர்ந்து இன்னும் சிலர் அவரது கட் அவுட்டை மின் விளக்குகளால் அலங்கரித்து இருந்தனர். அப்போது மின்கசிவு ஏற்பட்டு விபத்து நேர்ந்தது. இதை விட கொடுமை என்னவென்றால் ஜூனியர் என்டிஆர் கட் அவுட்டிற்கு அவரின் ரசிகர்கள் தீபாராதனை காட்டியபோது எதிர்பாராத விதமாக கட் அவுட்டில் தீப்பிடித்து எரிந்தது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. ரசிகர்களின் இந்த சம்பவங்களால் மக்கள் பயத்தில் உள்ளனர்.