Cinema
பாலா படத்தில் துணை நடிகைக்கு நேர்ந்த கொடுமை… பிரபல நடிகை கூறிய ஷாக்கிங் நியூஸ்….!!!
கேரளாவை உலுக்கி வரும் ஹேமா கமிட்டி அறிக்கை காரணமாக தற்போது பல நடிகைகள் அவர்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து வெளியே கூறி வருகிறார்கள். அந்த வகையில் பிரபல நடிகை காஜல் பசுபதி கூறியிருப்பதாவது, “நான் பார்த்து பிரம்மித்து போன பெரிய இயக்குனர் ஒருவரின் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் எனக்கு சிக்னல் கொடுத்து அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு ஓகேவா என்றார். அதேபோல் பரதேசி படப்பிடிப்பின்போது தேயிலை தோட்டத்தில் வேதிகாவை அடிப்பது போன்ற காட்சி வரும். அதில் நடித்து காட்டிய பாலா ஹீரோயின் வேதிகாவை அழைத்து அடிக்காமல் அருகில் இருந்த துணை நடிகையை அழைத்து கடுமையாக அடித்து காட்டினார். அதை பார்த்து நான் மிகவும் கோபமானேன். பாலா தான் தைரியமான ஆளாச்சே. அவர் ஹீரோயினை அடிச்சிருக்கலாமே. அந்த துணை நடிகைக்கு நடந்தது எனக்கு நடந்திருந்தால் நிச்சயம் கேட்டிருப்பேன்” என கூறியுள்ளார்.