General
நாட்டை பிளவுப்படுத்த காங்கிரஸ் முயற்சிக்கிறது – கங்கனா ரனாவத்…!!!
சமீபத்தில் நடந்த கூட்டத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, “வன்முறையும் பயமும் நிரம்பிய சக்கர வியூகத்தை பிரதமர் மோடி நெஞ்சில் தாங்கி இருக்கிறார்” என விமர்சனம் செய்திருந்தார். தற்போது அதற்கு பாஜக எம்பியும் நடிகையுமான கங்கனா ரனாவத் பதிலடி கொடுத்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, “ராகுல் காந்தி பேசிய பேச்சுக்களில் எந்த அர்த்தமும் இல்லை. அவர் பயன்படுத்திய வார்த்தைகள் மிகவும் கண்டிக்கத்தக்கது. இது நாட்டுக்கு நல்லதல்ல. நாட்டை பிளவுபடுத்தி, அதன் மூலம் பலனடைய காங்கிரஸ் முயற்சிக்கிறது. நேரு பிரதமராக இருந்த போதில் இருந்தே, இந்த வேலையைத் தான் காங்கிரஸ் செய்து வருகிறது” என கூறியுள்ளார்.