General
மக்கள் நாட்டை விட்டு போனா நல்லது தான்… பாஜக எம்பி கங்கனாவின் அறிவை கண்டு வியக்கும் மக்கள்…!!!
பாலிவுட்டில் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் தான் நடிகை கங்கனா ரனாவத். இவர் தற்போது வெறும் நடிகை மட்டுமல்ல பாஜக எம்பியும் கூட. இந்நிலையில் சமீபத்தில் கங்கனா ரனாவத்திடம நிரூபர் ஒருவர், “கடந்த 10 ஆண்டுகளில் இந்தியர்கள் தங்கள் இந்திய குடியுரிமையை துறந்துவிட்டு வெளிநாடுகளில் குடியேறுவது அதிகமாகிவிட்டதே” என்ன காரணம் என கேள்வி கேட்டுள்ளார். அதற்கு கங்கனா அளித்த பதில் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதன்படி அவர் கூறியதாவது, “நாட்டில் மக்கள் தொகை அதிகமாகி விட்டது. அதனால் மக்கள் இதுபோல நாட்டை விட்டு வெளியேறுவது நல்லதுதான்” எனக் கூறியுள்ளார். கங்கனாவின் இந்த பதிலை கேட்ட மக்கள் பலரும் ஒரு மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் கங்கனாவின் அரசியல் அறிவு என்பது இவ்வளவு தான் என அவரை விமர்சித்து வருகிறார்கள்.