General
சீமான் – திருச்சி எஸ்பி வருண்குமார் விவகாரத்தில் கனிமொழி செய்த அதிரடி டிவீட்….!!!!
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மற்றும் திருச்சி எஸ்பி வருண்குமார் ஆகிய இருவருக்கும் இடையே நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வருகிறது. முன்னதாக திருச்சி போலீசாரால் கைது செய்யப்பட்ட சாட்டை துரைமுருகன் போனில் இருந்த ஆடியோக்களை சோசியல் மீடியாவில் பதிவு செய்ய காரணம் எஸ்பி வருண்குமார் தான் என்று நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் அவரின் குடும்பத்தை மிகவும் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதன் பின்னர் தான் இந்த மோதல் வெடித்தது. இந்நிலையில் இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி, “பெண்கள் எந்த துறையில் இருந்தாலும், எவ்வளவு உயரத்தில் பறந்தாலும், அவர்கள் சார்ந்த ஆணை இழிவு செய்யும் வண்ணம், அந்த பெண்களை ஆபாசமாக இழிவுபடுத்துவதும், அறுவெறுக்கத்தக்க முறையில் பிரச்சாரம் செய்வதும் எந்த சூழலிலும் ஏற்றுக்கொள்ளமுடியாத இழிச்செயல். புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே IPS மற்றும் அவரது குடும்பத்தினர் மீது இணையவழி ஆபாச தாக்குதல் நடத்தி வரும் அனைவர் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஒரு சக பெண்ணாகவும், சமூக அக்கறை உள்ள நபராகவும் திருமிகு. வந்திதா பாண்டே IPS அவர்களின் கரம்பற்றி எனது ஆதரவையும், அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.