Cinema
கன்னட நடிகர் சுதீப் வைக்கும் கோரிக்கை… தெறித்து ஓடும் தமிழ் இயக்குனர்கள்…!!!
கன்னட நடிகர் சுதீப் தமிழ் ரசிகர்களுக்கும் சற்று பரிட்சயமான நபர் தான். ஏனெனில் அவர் ராஜமெளலி இயக்கிய நான் ஈ படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். அதுமட்டுமின்றி விஜய் நடிப்பில் வெளியான புலி படத்திலும் வில்லனாக சுதீப் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கன்னடத்தில் பல விருதுகளை வென்றுள்ள சுதீப் பின்னணி பாடகர், எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல முகங்களை கொண்டவர். இவருக்கு தமிழில் பல வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம். ஆனால் இவர் போடும் கண்டிஷனால் இயக்குனர்கள் தெறித்து ஓடி விடுகிறார்களாம். அதன்படி தன்னை தேடி வரும் இயக்குனர்களிடம், தன்னை தர லோக்கல் அளவுக்கு பெரிய பில்டப்பு செய்து திரையில் காட்டுமாறு சுதீப் கூறுகிறாராம். அதாவது அவர் தரையில் காலடி வைத்தாலே 10 டிரான்ஸ்பார்மர்கள் வெடித்து சிதறுவது போலவும், பூகம்பம் வெடிப்பது போலவும் பெரியளவில் பில்டப்பு செய்ய வேண்டுமாம். இதை கேட்கும் இயக்குனர்கள் வேண்டவே வேண்டாமென தலைதெறிக்க ஓடி விடுகிறார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.