Connect with us
   

Cinema

அந்த தகுதி எனக்கு கிடையாது… தவெக மாநாடு குறித்து பேசிய KPY பாலா….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் KPY பாலா. இந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்று தனது தனித்திறமை மூலம் தன்னை நிரூபித்த பாலா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

#image_title

தனது டைமிங் காமெடி மூலம் தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கிய இவர் தமிழில் நிறைய படங்களில் காமெடி கேரக்டரில் நடித்துள்ளார். தற்போது கூட ஒரு புதிய படத்தில் பாலா ஹீரோவாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர நிஜ வாழ்க்கையில் கஷ்டப்படும் ஏழை எளிய மக்களை தேடிச்சென்று பாலா உதவி செய்து வருகிறார். மேலும் ஆம்புலன்ஸ் வசதி இல்லாத மலைகிராமங்களுக்கு தனது சொந்த செலவில் ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்துள்ளார்.

#image_title

இப்படி ரியல் லைஃப் ஹீரோவாக வலம் வரும் பாலாவிடம் சமீபத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சி மாநாடு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அதற்கு தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு பற்றி பேசும் அளவுக்கு நான் பெரிய ஆள் கிடையாது.

அதுமட்டுமல்ல அதற்கான வயதும், தகுதியும், அறிவும் எனக்கு கிடையாது. நான் விஜயின் மாநாட்டில் கலந்துகொள்ளும் அளவிற்கு பெரிய ஆள் கிடையாது. அதே நேரத்தில் நான் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகன்” என்று கூறியுள்ளார்.

Continue Reading

More in Cinema

To Top