Connect with us
   

Cinema

குபேரா படத்திற்காக தனுஷ் செய்த செயல்…. மிரண்டு போன படக்குழுவினர்….!!!

நடிகர் தனுஷ் தற்போது அவரின் 50வது படமான ராயன் படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். இதுதவிர நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் இயக்கி வருகிறார். இதற்கிடையில் தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் குபேரா என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

#image_title

இந்த படத்தில் தனுஷ் தவிர நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். நடிகர் தனுஷ் நடிப்பிற்காக எந்த அளவிற்கும் இறங்கி செல்வார். அப்படி ஒரு ஆத்மார்த்தமான நடிகர்.

நடிப்பு என்று வந்துவிட்டால் போதும் எந்த எல்லைக்கும் செல்வார் என்பது நம்மில் பலருக்கும் தெரியும். அதற்கு உதாரணமாக அசுரன் படத்தின் சிவசாமி கேரக்டரே போதும். அந்த படத்தில் சிவசாமியாக அப்படியே வாழ்ந்து இருப்பார்.

#image_title

அதிலும் தனது மகனுக்காக ஊர் மக்கள் காலில் விழும் காட்சியை பார்க்கும்போது நமக்கே கண்களில் கண்ணீர் வரும். அந்த அளவிற்கு மிகவும் தத்ரூபமாக நடித்திருப்பார். தற்போது குபேரா படத்திலும் தனுஷ் அப்படி ஒரு தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளாராம்.

அதாவது சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் உள்ள குப்பை கிடங்கு ஒன்றில் படமாக்கப்பட்டதாம். காட்சிகள் மிகவும் தத்ரூபமாக இருக்க வேண்டும் உணர்ச்சிகள் உண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக தனுஷ் முகக்கவசம் கூட அணியாமல் கிட்டத்தட்ட 10 மணி நேரம் அந்த குப்பை கிடங்கில் இருந்து நடித்து கொடுத்தாராம். இதனை பார்த்த படக்குழுவினர் மிரண்டு போயுள்ளனர்.

Continue Reading

More in Cinema

To Top