General
வயநாட்டை கொடூரமாக தாக்கிய நிலச்சரிவு… வெளியான பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்….!!!
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் 29 ஆம் தேதி பெய்த கன மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்தனர். இதுவரை கேரளா சந்திக்காத மோசமான ஒரு இயற்கை பேரிடராக இந்த நிலச்சரிவு கருதப்படுகிறது. அந்த அளவிற்கு மோசமான உயிர் சேதம் மற்றும் பாதிப்புகளை இந்த வயநாடு நிலச்சரிவு ஏற்படுத்தியுள்ளது. அதிலும் பல மக்களின் உடலுக்கு பதிலாக வெறும் உடல் பாகங்கள் மட்டுமே கிடைத்தன. அதை வைத்து தங்களின் சொந்தங்களுக்கு இறுதிச்சடங்கு செய்த சோகமும் இங்கு தான் நடந்தது. இந்நிலையில் சூரல்மலை பகுதியில் வீடு ஒன்றில் இருந்த சிசிடிவி கேமராவில் நிலச்சரிவின் போது பதிவான காட்சிகள் தற்போது வெளியாகி காண்போரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
Visuals from a bakery in Chooralmala on the night the landslide took place in Wayanad#WayanadLanslide #Wayanad #LandSlides #RTV pic.twitter.com/lVBYly3A3g
— RTV (@RTVnewsnetwork) August 19, 2024