Cinema
ஓடிடியில் வெளியாகி புதிய சாதனை படைத்த மகாராஜா படம்….!!!!
பிரபல நடிகர் விஜய் சேதுபதி தமிழில் மாறுபட்ட கதைகளை தேர்வு செய்து வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இவரின் படங்கள் பெரும்பாலும் அனைத்து தரப்பு மக்களையும் ஈர்க்கும் விதமாகவே உள்ளன. அந்த வகையில் சமீபத்தில் நித்திலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. வெறும் குப்பை தொட்டியை மையக்கருவாக வைத்து வித்தியாசமான கதையுடன் வெளியான இந்த படம் கிட்டத்தட்ட 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இதனை தொடர்ந்து ஓடிடியில் வெளியாகி உலகளவில் கவனம் ஈர்த்த மகாராஜா படம் 2024 ஆம் ஆண்டு நெட் பிளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட இந்திய படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதுவரை நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்த படத்தை 18.6 மில்லியன் பேர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.