Cinema
தளபதி படம் தான் முக்கியம்…. விஜய் படத்திற்காக ஹீரோயின் வாய்ப்பை உதறிய மலையாள நடிகை….!!!
மலையாள திரையுலகில் வெளியான பிரேமலு படம் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவிலும் சென்சேஷ்னல் நடிகையாக மாறியவர் தான் இளம் மலையாள நடிகை மமிதா பைஜூ. இவர் ஏற்கனவே தமிழில் ஜீவி பிரகாஷ் நடிப்பில் வெளியான ரெபேல் படம் மூலம் அறிமுகமாகியுள்ளார். அதனை தொடர்ந்து தற்போது விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர அதர்வா படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். இந்நிலையில் தான் மமிதா பைஜூவிற்கு நடிகர் விஜய்யின் கடைசி படமான தளபதி 69 படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாக கூறப்படுகிறது. இதில் விஜய்க்கு தங்கையாக மமிதா நடிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. விஜய் படத்திற்காக ஹீரோயின் வாய்ப்பை வேண்டாமென மமிதா கூறியிருப்பது தற்போது பெரியளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.