General
முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன்…. மம்தா பானர்ஜி அதிரடி…!!!
கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நீதி கேட்டு மாநிலம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் மருத்துவர்கள் தரப்பில் இருந்து நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அரசு ஏற்காததால் மம்தா பானர்ஜி சுமார் 2 மணி நேரம் காத்திருந்தும் யாரும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. இதனை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய மம்தா, “மருத்துவ சகோதர, சகோதரிகளை சந்திக்க நேற்று மாலை 2 மணி நேரமாக. நான், தலைமைச் செயலர், டிஜிபி, உள்துறை செயலர் அனைவரும் காத்திருந்தோம். ஆனால், பயன் இல்லை. மருத்துவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து அவர்களை மன்னிக்கிறோம். 2 மணி நேரமாக காக்க வைத்து, பேச்சுவார்த்தைக்கு வராததற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவது இல்லை. இந்த போராட்டத்தில் அரசியல் சாயம் இருப்பது சாதாரண மக்களுக்கு தெரியாது. எதிர்க்கட்சியினருக்கு நீதி தேவை இல்லை. பதவி தான் வேண்டும். மக்கள் நலனுக்காக முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவும் நான் தயாராக இருக்கிறேன். மக்களுக்கு மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும். மருத்துவர்கள் போராட்டம் முடிவுக்கு வராததால், நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்காக, மேற்கு வங்க மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன்” என கூறியுள்ளார்.