General
எனக்கு விஜய் தான் தெரியும்… ஸ்டாலின் யாரு…??? ஒலிம்பிக் வீராங்கனை பதிலால் ஷாக்…!!!
சமீபத்தில் பாரிஸில் நடந்து முடிந்த ஒலிம்பிக் தொடரில் இந்தியா மொத்தமாக 6 பதக்கங்களை வென்றது. அதில் மகளிருக்கான 10 மீ துப்பாக்கி சுடுதல் பிரிவில் மட்டும் இந்திய வீராங்கனை மனு பாக்கர் 2 வெண்கல பதக்கம் வென்றிருந்தார். இந்நிலையில் இவருக்கு சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அப்போது மாணவர் ஒருவர் முதல்வர் முக ஸ்டாலினை தெரியுமா? என கேட்டார். அதற்கு பதிலளித்த மனு பாக்கர், “எனக்கு அவரை தெரியாது. ஆனால் பிரக்ஞானந்தா மற்றும் நடிகர் விஜய்யை தெரியும்” என கூறினார். அவரின் இந்த பதிலை யாருமே எதிர்பார்க்கவில்லை. தமிழகத்தை சேர்ந்தவராக இல்லை என்றாலும் உலக அளவில் பிரபலமாக இருக்கும் மனு பாக்கருக்கு நடிகர் விஜய்யை தெரியும் என்றால் விஜய் நிஜமாகவே மாஸ் ஹீரோ தான் என அவர் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.