General
நீரஜ் சோப்ராவுடன் திருமணமா….?? முதல் முறையாக மெளனம் கலைத்த மனு பாக்கர்….!!!
பாரிஸில் நடந்து முடிந்த ஒலிம்பிக் தொடரில் மகளிருக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியில் மனு பாக்கர் வெண்கல பதக்கமும், ஆடவருக்கான ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கமும் வென்றனர். இதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் ஜாலியாக பேசி கொண்டிருக்கும் வீடியோ வெளியானது. அதேபோல் மனு பாக்கரின் தாயாரும் நீரஜ் சோப்ராவிடம் சிரித்து பேசியிருந்தார். இதனால் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் இதுகுறித்து முதல் முறையாக மனம் திறந்துள்ள மனு பாக்கர், “சமூக வலைத்தளத்தில் என்ன நடக்கிறது என்றே எனக்கு தெரியவில்லை. இந்த பேச்சு எப்படி வந்தது என்றும் எனக்கு புரியவில்லை. நீரஜ் சோப்ரா எனக்கு நல்ல நண்பர். நீங்கள் நினைப்பது போல் கிடையாது. 2018ஆம் ஆண்டில் இருந்து நாங்கள் இருவரும் அடிக்கடி போட்டியின் போது சந்தித்துக் கொள்வோம். எங்களுக்குள் பெரிய அளவில் உரையாடல்கள் நிகழ்ந்தது கிடையாது. நான் நீரஜ் சோப்ராவை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்ற செய்தியில் கொஞ்சம் கூட உண்மை கிடையாது. அது வதந்தி தான்” என விளக்கம் அளித்துள்ளார்.