
Television
பிக்பாஸ் வீட்டில் ஒரு ஆம்பள கூட அதை செய்யல… வருத்தம் தெரிவித்த முன்னாள் போட்டியாளர் மாயா….!!!!
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 8 சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசன் தொடங்கிய சில நாட்களிலேயே காரசார வாக்குவாதம், அடிதடி என அதிரடியாக சென்று கொண்டிருக்கிறது.

#image_title
இப்படி உள்ள சூழலில் கடந்த சீசன் போட்டியாளரான மாயா இந்த சீசன் குறித்து விமர்சனம் செய்துள்ளார். அதன்படி இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள மாயா அதில் கூறியிருப்பதாவது, “இந்த சீசனில் ஆண் போட்டியாளர்கள் பெண் போட்டியாளர்களை சமைக்க வைக்க வேண்டும். அவர்களை பாத்திரம் கழுவ வைக்க வேண்டும் என்று பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

#image_title
இதை பார்க்கும்போது கோபம் வருகிறது. ஒரு ஆம்பள கூட இத்தனை வருஷமா பெண்கள் தானே அடிமையா வீட்டு வேலை செஞ்சுட்டு இருக்கிறாங்க இதை நாம் மாற்றுவோம் என்று சொல்லவில்லை. ஆண்களின் இந்த நடவடிக்கையை பார்க்கும்போது கஷ்டமாக உள்ளது” என கூறியுள்ளார்.