General
ஆண்குறியால் பறிபோன பதக்கம்… ஒலிம்பிக் வீரருக்கு நேர்ந்த தர்மசங்கடம்…!!!
பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் போல் வால்ட் எனப்படும் குச்சியை வைத்து உயரம் தாண்டுதல் போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரெஞ்சு வீரர் ஆண்டனி அம்மிராட்டிக்கு ஒரு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது இதன் தகுதி சுற்றில் பங்கேற்ற ஆண்டனி முதலில் 5.40 மீட்டர் உயரத்தையும் இரண்டாவதாக 5.60 உயரத்தையும் வெற்றிகரமாக தாண்டினார். ஆனால் இறுதியாக 5.70 உயரத்தை தாண்டும் போது அவரின் ஆண்குறி பார் குச்சியை இடித்து குச்சி கீழே விழுந்து விட்டது. இதன் காரணமாக அவர் அதில் தகுதி பெறவில்லை. ஒலிம்பிக் வீரருக்கு இப்படி ஒரு நிலைமையா என பலரும் கூறி வருகிறார்கள்.