Television
ரோகிணி பற்றிய உண்மையறிந்த மீனா… மகிழ்ச்சியான செய்தி சொன்ன ரோகிணி….!!!!
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா அவருடன் பூ கட்டும் பெண்களிடம் முத்து மனம் மாறியது குறித்து சொல்லி சந்தோசப்படுகிறார். அந்த சமயத்தில் சீதா போன் செய்து உடனே ஹாஸ்பிடலுக்கு 5 முழம் பூ கொண்டு வருமாறு கூறுகிறார். அதற்கு மீனா ஏன் என கேட்க இனிமே எங்க ஹாஸ்பிடல் பூ ஆர்டர் எல்லாம் உனக்கு தான் என கூறுகிறார். மேலும் இனி நீ வீட்டுக்கு காசு தர வேண்டாம் எனவும் சீதா கூற அதை கேட்டு மீனா கண் கலங்குகிறார்.

#image_title
அதே நேரத்தில் ரோகிணி சீதா வேலை பார்க்கும் மருத்துவமனைக்கு வருகிறார். அதை பார்க்கும் சீதா அவங்க ஏன் வந்திருக்காங்கனு கேளு என மீனாவிடம் கூறுகிறார். ஆனால் மீனாவோ வேண்டாம் ஏற்கனவே அவங்க விஷயத்துல தலையிடக் கூடாதுனு சொல்லிட்டாங்க என கூறுகிறார். பின் சீதா நான் போய் விசாரிக்கிறேன் என கூறி ரிசப்ஷனுக்கு சென்று கேட்கிறார். அதற்கு அவர்கள் ரோகிணி இரண்டாவது குழந்தைக்கு ட்ரீட்மெண்ட் எடுக்க வந்திருப்பதாக கூறுகிறார்கள்.

#image_title
அதை கேட்டு சீதா ஷாக்காகிறார். பின் இதுகுறித்து மீனாவிடம் கூறிவிட்டு நர்சிடம் கேட்கவா என்கிறார். ஆனால் மீனாவோ அதெல்லாம் வேண்டாம். இனி இதுபற்றி யாரிடமும் எதுவும் பேசாத என கூறிவிடுகிறார். பின் குழப்பத்துடன் வீடு வரும் மீனாவின் நடவடிக்கையை பார்த்து விஜயா அவரை திட்டுகிறார். அந்த சமயத்தில் ரோகிணி மற்றும் மனோஜ் கையில் ஸ்வீட்டுடன் வருகிறார்கள்.

#image_title
அதை பார்த்ததும் விஜயா மகிழ்ச்சியான விஜயா என்ன விசேஷம் என்று கேட்கிறார். அதற்கு மனோஜ் இன்னைக்கு ஷோரூமில் அதிக பொருட்கள் விற்பனை செய்ததாக கூறி சந்தோசப்படுகிறார். அதை கேட்டதும் கோபப்படும் விஜயா அவ்வளவு தானா நான் கூட நீ கர்ப்பமா இருக்கனு சொல்லப்போறியோனு நினைச்சுட்டேன் என்று கூறுவதோடு இன்றைய எபிசோட் முடிகிறது.